"கருப்பன் குசும்புக்காரன்"...வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் கருப்பன்..."வாடா வாடா என் ஏரியாவுக்கு வாடா"

x

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

தினமும் இரவில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் அந்த யானையை வனத்துறையினரும் விவசாயிகளும் இணைந்து விரட்டினாலும், கருப்பன் யானை சிறிதும் அச்சமின்றி தொடர்ச்சியாக அதே பகுதியில் உலா வருகிறது. இதையடுத்து கருப்பனைப் பிடிக்க களமிறங்கியுள்ள கபில்தேவ், முத்து மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள், கருப்பன் வெளியேறும் பகுதிகளில் காத்துக் கிடக்கின்றன. அந்த யானையை மயக்க ஊசி செலுத்து பிடிக்க 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து அனைவருக்கும் போக்கு காட்டி வரும் கருப்பன்

எந்த இடத்தில் நடமாடுகிறது என்பதை கண்காணிப்பதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2வது நாளாக யானையை பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்