சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்... திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

x

ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை, அமைச்சர்கள் முத்துசாமி , செந்தில்பாலாஜி, எ.வ.வேலு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த திருமகன் ஈவெரா முன்னெடுத்த திட்டங்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றியடைய செய்ய வேண்டியது வாக்காளர்களின் முதல் கடமை என்றும், அதிமுகவைச் சேர்ந்த செங்கோட்டையன் சட்டமன்றத்திலேயே முதல்வரை பாராட்டியுள்ளார் என்றும் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் முத்துசாமியும்தான், இந்த தொகுதியின் உண்மையான வேட்பாளர் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்