சப்பா..! இப்பவே கண்ணைக் கட்டுதே! 'இப்படியெல்லாம் கூடவா யோசிப்பார்கள்' .. ஈரோடு வேட்புமனு அலப்பறைகள்

x

காலையில் 11 மணிக்கு தான் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்ற நிலையில், அதற்கு முன்பாக மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்து காத்திருந்தனர்...

ஒருவர் செருப்பு மாலையுடனும்... இன்னொருவர் காந்தி வேடமிட்டும்... மற்றொருவர் கின்னஸ் சாதனைக்காகவும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தது கனலாய் தகித்துக்கொண்டிருக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களத்தை கலகலப்பாக்கியது...

அதில் முதலாமவர், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை பலருக்கும் எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் மன்னன், பத்மராஜன்.

தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த மனிதர் ஒரு கோடி ரூபாய் செலவலித்திருப்பதாக கூறியதோடு, வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தாம் விரும்புவது தோல்வி ஒன்றை மட்டுமே என்று கூறியது... 'இப்படியெல்லாம் கூடவா யோசிப்பார்கள்' என நம்மை நகைக்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்