காசு மூட்டையோடு வந்த வேட்பாளர்.. 3 மணி நேரம் எண்ணி எண்ணி சோர்ந்த அதிகாரிகள் - ஈரோடு தேர்தல்... சுவாரஸ்ய சம்பவம்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த வேட்பாளர், டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி, வேட்புமனுத் தாக்கலின்போது பல்வேறு சுவையான சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

நான்காவது நாளான இன்று, வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சென்னையை சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர், 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை, 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்தார்.

அந்த நாணயங்களை காலை 11 மணிக்கு எண்ணத் தொடங்கிய அலுவலர்கள், மதியம் ஒரு மணிக்கு எண்ணி முடித்தனர்.

எதற்கெடுத்தலும் டிஜிட்டல் என்று கூறி வரும் மத்திய அரசு, டெபாசிட் தொகையை மட்டும் ரொக்கமாக வாங்குவதை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்