திடீரென மேலெழுந்த புதைக்கப்பட்ட பிணம்... அதிர்ச்சியில் மக்கள்..திக் திக் சம்பவம்

x

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணம் மேலெழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

ஒரு மாதத்திற்கு முன்பு பாசூர் அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்ற 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் அவருக்கு முறையாக கை கட்டு, கால் கட்டு, வாய்க்கட்டு, காலில் மஞ்சள் கயிறு கட்டி முறையாக அடக்கம் செய்துள்ளனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு அடக்கம் செய்யப்பட்ட துரைசாமியின் சடலம் மேலே வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு அருகே உள்ள முட்புதரில் சடலம் மாட்டிக் கொண்டதால் தண்ணீர் வற்றிய பிறகு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

விசாரணைக்கு பின், சடலத்தை துரைசாமியின் மகன் உதயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, துரைசாமியின் உடல் 2வது முறையாக அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்