ஈரோடு தேர்தலில் ஒரே ஒரு டிஜிட் வாக்கு பெற்ற வேட்பாளர்கள் - வெளியான ரிப்போர்ட்

x
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்திலும், 49 சுயேட்சை வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
  • ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு தொடங்கிய நாள் முதல், சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் கவனம் ஈர்த்து வந்தனர்.
  • இறுதியாக, மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
  • இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலிடத்தையும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
  • நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்த நிலையில், ஐந்தாவது இடத்தை 798 ஓட்டுகளுடன் நோட்டா கைப்பற்றியது.
  • 14 சுயேச்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்திலும், 49 சுயேச்சை வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்திலும், 10 வேட்பாளர்கள் 3 இலக்கத்திலும் வாக்குகளை பெற்றிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்