மணக்கோலத்தில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்..! - ஈரோடு இடைத்தேர்தல்

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வேட்பாளர் ஒருவர் மணக்கோலத்தில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பல்வேறு கட்சியின் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னதாராபுரத்தைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர், மணக்கோலத்தில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும், தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்ற, மணக்கோலத்தில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்