பிறந்து 3 மணி நேரம் ஆன பெண் குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்; மோட்டார் அறையில் இருந்து வந்த சத்தம் - தென்னந்தோப்பில் நடந்த கொடுமை!

x

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை, தென்னந்தோப்பில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மொடக்குறிச்சி அருகே தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற ரஞ்சித் என்பவர் சத்தத்தை கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது, வெள்ளைத் துணியில் மூடிய நிலையில் குழந்தை இருந்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்