"கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும்" - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு

x
  • இது குறித்த ரிட் மனுவில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளதாகவும்,
    • கடந்த காலங்களில் கோலார், கோலார் தங்க வயல், காந்திநகர் ஆகிய இடங்களில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் நெருங்குவதால், வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வகையிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையிலும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் எனவும்,
    • அதற்காக தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனிடையே டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங் வருகிற 10ம் தேதி இந்த ரிட் மனுவை விசாரிக்கவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்