ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை என தகவல் - பசும்பொன்னில் மரியாதை செலுத்தவுள்ள ஓபிஎஸ் | EPS | OPS

x

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு மரியாதை செலுத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு செல்லவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஓபிஎஸ், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும், ஈபிஎஸ்-ன் ஆணைக்கிணங்க அவரது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ராமநாதபுரம் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்