கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் ஈபிஎஸ்

x

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்.

சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் செல்லும் அவர், கடலூர் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளிலும் நேரில் பார்வையிடுகிறார். மேலும் பொது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்குகிறார். முன்னதாக இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம்,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், கோகுல இந்திரா, பா.வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்