புதிய வாகனத்துக்கு மாறிய ஈபிஎஸ்... இனி புயல் வேகத்தில் பிரச்சாரம்

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்கியுள்ள புதிய வாகனம் கவனத்தை ஈர்த்து வருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரச்சாரத்திற்காக பிரத்தியேகமான புதிய வகை வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். force நிறுவனத்தின் urbania வகை வாகனத்தை தற்போது எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த தொடங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்