"நானே பொதுச்செயலாளர்.." - ஈபிஎஸ் மீது சீறிய முரசொலி

x
  • திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கக் கட்டுரை வெளியாகி உள்ளது.
  • அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இறுதியானது என்றும், அதனை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறப்பட்டு உள்ளது.
  • தானே பொதுச்செயலாளர் என தீர்மானம் போட்டவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஒரு கட்சி நடத்த வேண்டுமானால் பொதுக்குழு கூட வேண்டும் என்ற ஒற்றை வாதத்தை வைத்து அவர் பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எந்த அடிப்படையில் பொதுச்செயலாளர் ஆனார்கள் என்ற வரலாறு தெரியாமல், எடப்பாடி பழனிசாமி பேசுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்