இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 7வது டி20 - தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

x

பாகிஸ்தானுக்கு எதிரான ஏழாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து, 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நான்கிற்கு மூன்று என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது


Next Story

மேலும் செய்திகள்