இங்கிலாந்து பவுலர் ஆன்டர்சன் புதிய சாதனை

x

இங்கிலாந்து பவுலர் ஆன்டர்சன் புதிய சாதனை


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் படைத்து உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை 951 விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆன்டர்சன் வீழ்த்தி உள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத்தின் சாதனையை முறியடித்து, அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆன்டர்சன் பெற்று உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்