பொறியியல் கலந்தாய்வு. வெளியான புது தகவல்

x

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 301 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு கடந்த மாதம் 5 ந் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் 6 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மொத்தமாக ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 301 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட, 11 ஆயிரத்து 218 விண்ணப்பங்கள் அதிகமாகும். சான்றிதழ்களை ஜூன் 9 ந் தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம். ரேண்டம் எண் வரும் 6ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. சான்றிதழ்கள் சரிபார்ப்பு இன்று முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் 4 சுற்றுகலாக நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்