வேலூரில் அமலாக்கத்துறை.. சிக்கிய பிரபல நகைக்கடை

வேலூரில் உள்ள தனியார் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில், நேற்று காலை 9 மணி முதல் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனை, 14 மணி நேரத்திற்குப் பின் நிறைவடைந்தது. நகைக்கடையின் வங்கி பண பரிவர்த்தனைகள், வியாபாரம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com