END Vs SA 2nd Test - ஆண்டர்சனால் சுருண்ட தென் ஆப்பிரிக்கா

x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, இன்னிங்ஸ் வெற்றி பெற்று உள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 151 ரன்களும், இங்கிலாந்து 415 ரன்களும் எடுத்தன. 264 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், 2வது இன்னிங்சில் 179 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, ஓவலில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்