"ஏன் கண்ணே நெருப்பா கோவம்" க்யூட்டா டான்ஸ் ஆடி VIBE ஆன டோலி..கண்ணு வைத்த எஸ்.ஜே.சூர்யா-வீடியோ வைரல்

x

'இறைவி' பட பாடலை வைரலாக்கிய பெண்ணிற்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் இறைவி. இப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணக் காட்டி மொரச்சா...' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதனிடையே இந்த பாடலுக்கு பெண் ஒருவர் நடமாடி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் பாடலை வைரல் செய்த பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, அவரது நடனம் மகிழ்ச்சி அளிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்