மலை கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. உள்ளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்-ஈரோட்டில் பரபரப்பு..!

x

கடுமையான பனிமூட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே உகினியம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை உகினியம் வன கிராமத்தில் உள்ள விளை நிலத்தில் பயங்கர சத்தத்தோடு ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதைக் கண்ட மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகே சென்று பார்த்தபோது ஹெலிகாப்டரில் இருந்து 6 பேர் கீழே இறங்கியுள்ளனர். இது குறித்து விசாரித்த போது வாழும் கலை யோகா நிறுவனர் ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து திருப்பூரில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றபோது கடுமையான பனிமூட்டம் காரணமாக வழி தெரியாததால் பைலட் ஹெலிகாப்டரை அந்த கிராமத்தில் தரையிறக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து பனிமூட்டம் விலகியதும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்