மாணவிகளுக்கு ஏற்பட்ட சங்கடம்...சொந்த செலவில் மாற்றி காட்டிய ஆசிரியை - அரசுப் பள்ளியில் நெகிழ்ச்சி

x

அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு கழிவறை கட்டித் தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஐங்குணம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் கழிவறையைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு போதிய வசதிகள் இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனைக் கண்டு கவலையுற்ற அப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையான ஆனி ரீட்டா, தலைமை ஆசிரியரின் அனுமதியோடு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாணவிகளுக்கு 8 கழிவறைகளும் ஆசிரியர்களுக்கு 2 கழிவறைகளும் என மொத்தம் 10 கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். அத்துடன், கழிவறைகளுக்குத் தேவையான வாளி, குவளைகளையும் தனது சொந்த செலவில் வாங்கித் தந்துள்ளார், ஆனி cரீட்டா... இவரது பொதுநல சேவை அப்பகுதி மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்