"நான் ட்விட்டர் சீஇஓ-ஆக பொறுப்பேற்றுக் கொள்ளவா?"...யூ டியூபருக்கு பதிலளித்த எலான் மஸ்க்

x

உலகின் புகழ்பெற்ற யூ டியூபர், ட்விட்டரின் தலைவராகும் தனது விருப்பத்தை எலான் மஸ்க்கிடம் தெரிவித்துள்ளார்... ட்விட்டரின் சி இ ஓ-வாக பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் தனமாக யாரும் கிடைத்தால் தான் அப்பதவியில் இருந்து விலகி விடுவதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார்... இந்நிலையில், உலகில் அதிக சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட 24 வயதே ஆன யூ டியூபர், ஜிம்மி 'மிஸ்டர் பீஸ்ட்' டொனால்ட்சன், ட்விட்டரின் சி இ ஓ-ஆக விருப்பம் தெரிவித்து ட்வீட் செய்தார். அவருக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், ஜிம்மியின் கேள்வியில் தவறில்லை என்பது போல் பதிலளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்