இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு என்னதான் ஆச்சு?எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு...!

x
  • டிவிட்டரின் நஷ்டத்தை குறைக்க பல்வேறு நாடுகளில் உள்ள டிவிட்டர் அலுவகலகங்களை எலான் மஸ்க் மூடி வருகிறார்.
  • கடந்த அக்டோபரில் 4 ஆயிரத்து 400 கோடி டாலருக்கு டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதன் நஷ்டத்தை குறைக்க சுமார் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
  • கடந்த அக்டோபரில், உலகெங்கும் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 2 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டுள்ளார்.
  • இந்தியாவில் பணியாற்றிய 200 டிவிட்டர் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் ஏறகனவே நீக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களை மூடியுள்ளார்.
  • அங்கு பணியாற்றியவர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கூறப்பட்டுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள டிவிட்டர் அலுவலகம் மட்டும் தற்போது இயங்கி வருகிறது. சான் பிரான்சிஸ்கோ, லண்டன் அலுவலகங்களுக்கு பல கோடி டாலர் வாடகை பாக்கி செலுத்த வேண்டியியுள்ள நிலையில், பல்வேறு ஒப்பந்தாரர்கள் டிவிட்டர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
  • டிவிட்டர் நிறுவனம் தினசரி நஷ்டம் தற்போது 17 லட்சம் டாலராக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்