எலான் மஸ்க்-ன் அடுத்த பெரிய சம்பவம்.. பிரபலங்களின் ப்ளூ டிக்கை தூக்கிய ட்வீட்டர்..!

x
  • ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு, தனது தடாலடியான மாற்றங்களால் அதிரடி காட்டி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார், உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க். ட்விட்டர் சின்னமான நீல பறவை சின்னத்தை எடுத்துவிட்டு... நாய் படத்தை வைத்தது... பிறகு பறவை படத்தையே திரும்ப கொண்டு வந்தது... ட்விட்டரின் பெயரையே ட்டிட்டர் என மாற்றம் செய்ய துடித்தது... என ஒவ்வொன்று ஒவ்வொரு ரகம்.
  • இந்நிலையில், ட்விட்டரில் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
  • மாத சந்தாவான 900 ரூபாய் கட்டணம் செலுத்தாததால்... அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால் தற்போது அதிரடியாக பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூடிக்கை நீக்கியுள்ளது, ட்விட்டர்
  • தமிழக முதல்வர் ஸ்டாலின், உத்தரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
  • அது போல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளுக்கான ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கெனவே பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர்களை தங்களின் ட்விட்டர் கணக்கின் பெயராக வைத்ததில் ஏற்பட்ட குழப்பத்தில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டன.
  • விளையாட்டு பிரபலங்களான தோனி, விராட் கோலி, ரோஜர் ஃபெடரர்... சர்வதேச புகழ் பெற்ற பிரபலங்களான கே-பாப் சிங்கர்ஸ். செலினா கோம்ஸ், லேடி காகா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பலரது ட்விட்டர் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் பாரதிய ஜனதா கட்சி , ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இருந்தும் ஃப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தாதவர் களின் பக்கங்களில் புளூடிக் நீக்கப்படும் எனட்விட்டர் எச்சரித்திருந்த நிலையில், தற்போது நடவடிக்கையில் இறங்கி அதிரடி காட்ட தொடங்கிவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்