2 பேரை மிதித்து கொன்ற யானைகள்.. தமிழக எல்லையில் பீதி

x

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகள், பார்த்திச்சேனு கிராமத்தைச் சேர்ந்த உஷா மற்றும் சப்பாணிகுந்தா கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் ஆகிய இரண்டு பேரை மிதித்து கொன்றது. இதையடுத்து, காட்டிற்குள் விரட்டப்பட்ட 2 யானைகளும் அலவி புதுகுர் பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் இந்த 2 காட்டு யானைகளை அடக்கவும், மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் ஆப்ரேஷன் கஜாவை வனத்துறை தொடங்கியுள்ளது. இதற்காக, பயிற்சி பெற்ற கணேஷ், ஜெயந்த் ஆகிய இரண்டு யானைகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்