"எதுலயாச்சும் சிக்குறதே உனக்கு வேலையா போச்சு....!"சேற்றில் சிக்கிய நண்பனை போராடி மீட்ட யானை..

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில், 2 யானைகள் குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய நிலையில், ஒரு யானை நகர முடியாமல் சேற்றில் சிக்கிக் கொண்டது. மற்றொரு யானை தனது தும்பிக்கையால் தள்ளி, சேற்றில் சிக்கிய யானையை நகர வைக்க முயற்சித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின், சேற்றில் சிக்கிய யானையை கரைக்கு தள்ளியபடி சக யானை மீட்டது. வாகன ஓட்டிகள் படம்பிடித்த இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com