பலரை கொன்று... குலை நடுங்க வைத்த 'அரிக்கொம்பன்'... கண்ணகி கோயில் வனப்பகுதிக்குள் விடப்பட்ட காட்சி

x

இடுக்கி சின்னக்கானல் பகுதியில் அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிக்கொம்பன் பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் கண்ணகி கோயில் வனப்பகுதியில் விடப்பட்டது. முன்னதாக சின்னகானலில் இருந்து பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையை கண்ணகி கோயில் வனப்பகுதிக்குள் விடும் முன்பு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு இன்று அதிகாலை 4 மணிக்கு யானை காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது. தற்போது யானை ஆரோக்கியமாக இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். புதிய வனப் பகுதியில் அரிக்கொம்பன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை கண்காணிக்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தார். மேலும் அரிக்கொம்பனை பிடிக்கும்போது செலுத்தப்பட்ட மயக்க ஊசி அதற்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் எந்தவொரு பணியிலும் பிளஸ் மற்றும் மைனஸ்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்