மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'மக்னா' - மருத்துவர் காலை பிடித்து இழுத்ததால் பரபரப்பு

x

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 'மக்னா' - மருத்துவர் காலை பிடித்து இழுத்ததால் பரபரப்பு


கேரள மாநிலம் பத்தேரி பகுதியில் சுற்றித்திரிந்த, அரிசி ராஜா என்ற மக்னா வகை காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனையடுத்து முத்தங்கா புலிகள் காப்பக யானைகள் முகாமில், பிரத்யேக கூண்டில் யானையை அடைக்க முயற்சிகள் நடைபெற்றது. அப்போது கால்நடை மருத்துவர் அருண் சக்கரியாவின் காலை பிடித்து இழுக்க யானை முயற்சித்தது. உடனடியாக சுதாரித்து கொண்ட மருத்துவர் கூண்டில் இருந்து கீழே குதித்தார். இதனால் காயமடைந்த மருத்துவர் அருண் சக்காரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்