பக்கவாதம், பார்வை குறைபாட்டை சரிசெய்ய மனித மூளையில் எலக்ட்ரானிக் 'சிப்' - மஸ்க்கின் அதிரடி

x

பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்கும், முடவர்களை எழுந்து நடக்க வைப்போம் என்று சிலர் பிரசங்கம் செய்வதை கேட்டிருப்போம்...அந்த கூற்றுகளை நிஜத்தில் செயல்படுத்த தயாராகிவருகிறது நியுராலிங்க் நிறுவனம். ஆம்...அதிரடி திட்டங்களுக்கு பெயர் போன எலான் மஸ்க்கின் நிறுவனமான நியூராலிங்க் நிறுவனம்தான் இந்த அதிரடி அறிவியலையும் அரங்கேற்றுகிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், நியுராலிங்க் என்ற நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தை 2016ல் தொடங்கினார்.

உலகின் பல்வேறு முன்னணி பல்கலைகழகங்களை சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் பணியமர்த்தப்பட்டனர்.மனித மூளையில், மிகச் சிறிய அளவிலான எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி, மூளையுடன் கம்ப்யூட்டர் களை நேரடியாக தொடர்பு கொள்ள செய்யவதே இதன் நோக்கம்.இதன் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை ஏற்படுத்தவும், நரம்பு மண்டல நோய்களினால் நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களை மீண்டும் நடக்க வைக்கவும் முயற்சி செய்ய உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். அதன் படி ஒரு சிறிய நாணயத்தின் அளவு கொண்ட சிப்புகள், குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.

சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, சிப் பொருத்தப்பட்ட குரங்குகள் வீடியோ கேம்ஸ் விளையாடும் காணொளிகள் வெளியிடப்பட்டன.பரிசோதனை முடிவுகள், செயல் திட்டங்கள் பற்றிய விவரங்கள் அமெரிக்க அரசின், உணவு மற்றும் மருந்துகள் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டன.இந்நிலையில், மனித மூளையில், இத்தகைய சிப்களை பொருத்தி, சோதனை மேற்கொள்ள, நியுராலிங்க் நிறுவனத்திற்கு, அமெரிக்க உணவு மற்று மருந்துகள் ஆணையம் அனுமதியளித்துள்ளது. நரம்பு மண்டல நோய்களுக்கு தீர்வு காண்பது மட்டும் தமது நோக்கம் அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் மனிதர்களை வெல்வதை தடுப்பதும் தனது நோக்கம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். சின்க்ரான் என்ற நிறுவனம், அமெரிக்காவில் முதல் முறையாக மனித மூளையில் ஒரு கம்யூட்டர் சிப்பை பொருத்தியுள்ளதாக கடந்த ஆண்டு ஜூலையில அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்