மின் கட்டண உயர்வு விவகாரம் - நூற்பாலைகள் மேல்முறையீட்டு மனு விசாரணையை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

x

தமிழகத்தின் மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீட்டு மனு விசாரணையை, உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழகத்தின் மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்புடைய நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

நூற்பாலைகள் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படாததால், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படாமல் இருப்பது கட்டண உயர்வை எப்படி பாதிக்கும், குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் நியமித்துவிட்டால், மனுதாரரின் கோரிக்கை நீடித்திருக்குமா எனக் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.

இதையேற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தின் மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்புடைய நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவின் விசாரணையை முடித்து வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்