இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க....ஈரக்கையுடன் ஸ்விட்சை தொட்டு உயிரிழந்த சிறுமி..அதிர்ச்சி சம்பவம்

x

ஆவடி அடுத்த பட்டாபிராமில் ஈரக் கையுடன் ஸ்விட்சை ஆன் செய்த 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கக்கன்ஜி நகர் மாடல் தெருவை சேர்ந்த சுவேதா என்ற சிறுமி அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று மாலை சுவேதா குளித்து விட்டு வந்து அப்படியே ஈரக் கையால் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் ஓடி வந்துள்ளார். ஆனால், அறை உள்பக்கம் தாழிட்டிருந்ததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுவேதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்தே சுவேதா பிறந்த நிலையில், தங்கள் மகளை இழந்து அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்