பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் நிலை தடுமாறி விழுந்த மூதாட்டி - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பேருந்து நிலையம் முதல் என்.ஜி.ஓ. காலனி வரையிலான நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாறுகாலில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில், மூதாட்டி நிலைதடுமாறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்