வீட்டைவிட்டு துரத்தப்பட்ட வயோதிக தம்பதி... ஒரே கையெழுத்தில் மாறிப்போன வாழ்க்கை...

x

வயதான காலத்தில் ஆதரவன்றி நிற்கும் இவர்கள் தான் ஸ்டீபன் - சுகுணாதேவி தம்பதி.ஸ்டீபனுக்கு சொந்தமாக பூட்டப்பட்டு கிடக்கும் இந்த வீடும் ஒரு காலி மனையும் இருந்திருக்கிறது.ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத நிராயுதபாணியாக ஸ்டீனும் அவரது மனைவி சுகுணாதேவியும் வீதியில் நிற்க காரணம் 500 கோடியை ஆட்டையைப் போட்ட இந்த கேடி நாகராஜ் தான்.ஆம்.... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகராஜ் ஸ்டீபனிடம் அறிமுகமாகி இருக்கிறார்.தான் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முகவராக இருப்பதாகவும்,உத்திரமேரூர், மானாமதி, பகுதிகளில் உள்ள பலரும் ஆருத்ராவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

கொடுக்கும் பணத்திற்கு இரண்டு மடங்கு வட்டி கிடைக்கும்,வயதான காலத்தில் வட்டியை வாங்கி நிம்மதியாக வாழலாம் என ஆசை காட்டி இருக்கிறார்.ஆனால் தங்களிடம் பணம் இல்லையே என்று கவலையோடு சொன்ன தம்பதியிடம் "அதான் வீடு இருக்கே அப்பறம் என்ன கவலை" "வீட்டை வித்து பணத்தை கட்டலாம்" வருமானத்துக்கு வருமானமும் வரும் வட்டிக்கு வட்டியும் வரும் எனச்சொல்லி 26 லட்சத்திற்கு வீட்டை விற்றிருக்கிறார் நாகராஜ்.

அதில் வெறும் 6 லட்சத்தை மட்டும் தம்பதியிடம் கொடுத்து விட்டு,மீதி பணத்தை ஆருத்ரா வில் முதலீடு செய்ததாக கூறி வந்துள்ளார். வட்டி வரும் என்று காத்திருந்த தம்பதிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. சில மாதங்களில் முதலீட்டாளர்களின் மொத்த பணத்தையும் ஆருத்ராவின் முதலாளிகள் முழுங்கி கொண்டு தலைமறைவாகினார்கள்.அதில் முகவர் நாகராஜும் 500 கோடியை சுருட்டி கொண்டு எஸ்கேப் ஆகினார்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில்,நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது ஜாமினில் வெளியே வந்த நாகராஜ் தனது அடியாட்களுடன் சென்று விற்ற வீட்டில் குடியிருந்த ஸ்டீபன் சுகுணா தேவி தம்பதியை வெளியே விரட்டி விட்டி இருக்கிறார்.மேலும் உள்ளே இருந்த சாமான்களை வீதியில் வீசி வீட்டிற்கு பெரிய பூட்டை போட்டிருக்கிறார்‌. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும் ஸ்டீபனின் வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.முடிவில் நடந்த அனைத்தையும் நாகராஜின் வேலைதான் என்பதை அறிந்து கொண்ட போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பேராசை பெருநஷ்டம் என்பதை போல இந்த தம்பதி வயதான காலத்தில் வட்டிக்கு ஆசைப்பட்டு நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்