'திரெட்ஸ்'-க்கு ஆப்பு வைக்க தயாரான எலான் ..! ஒரேயொரு மீம்ஸ் தான்..! - மார்க் மீது பாயும் வழக்கு..? மஸ்கின் அதிரடி ஸ்டார்ட்

x

உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக புதிதாக த்ரெட்ஸ் என்ற செயலியை இன்று அறிமுகப்படுத்தியது மார்க் சூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம்.

இந்நிலையில், ட்விட்டரை பார்த்து அப்படியே காப்பியடித்து தான் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் சூக்கர்பெர்க் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு நிலவுகிறது. தொழில் முறையில் இருவருக்குமிடையே போட்டி இருந்த போதிலும், அதன் காரணமாக உலக பெரும் பணக்காரர்கள் இருவரும் ஒண்டிக்கு ஒண்டி சன்டையிட்டுக் கொள்ளப் போவதாக ஒரு செய்தி தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் மார்க் சூக்கர்பெர்க் தற்காப்புக் கலை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியானது. அதில், எலான் மஸ்க்கும் இதே போன்று சண்டை பயிற்சி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த எலான் மஸ்க், தான் அவருடன் தனியாக கூண்டுக்குள் சண்டையிடத் தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு தனது இன்ஸ்டாகிராமில் பதிலளித்த சூக்கர்பெர்க், சண்டையிட ஓர் சரியான இடத்தை தேர்வு செய்து தெரிவிக்கும் படி பதிவிட்டார். தொடர்ந்து இருவரும் சண்டைக்கு தயாராவது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

இந்நிலையில், சற்று தணிந்திருந்த இந்த மோதல் போக்கு தற்போது "த்ரெட்ஸ்'' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதால் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

ட்விட்டரை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முனைப்பு காட்டும் சூக்கர்பெர்க், 11 ஆண்டுகளுக்கு பின் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இரண்டு ஸ்பைடர்மேன்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள தயாராக இருக்கும் படத்தை பகிர்ந்து எலான் மஸ்க்கை வம்புக்கு இழுத்துள்ளார்.

மறுபுறம் த்ரெட்ஸ் செயலி விவகாரம் குறித்து மவுனம் கலைத்த எலான் மஸ்க், "ட்விட்டரை காப்பியடித்து தான் த்ரெட்ஸ் செயலி வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், கம்பியூட்டரில் "காப்பி பேஸ்ட்" செய்வதற்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் ஷார்ட்-கட் கீயான "கண்ட்ரோல் பிளஸ் சி(ctrl+c) மற்றும் கண்ட்ரோல் பிளஸ் வி(ctrl+v)" பட்டன்களின் படத்தை பதிவிட்டு இந்த புதிய செயலி குறித்து ட்விட்டரில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸ் செயலி, ட்விட்டருக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் என்பதே இணையவாசிகளின் கருத்தாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்