தை அமாவாசை- பள்ளியில் படையலிட்ட தலைமை ஆசிரியர்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்

தை அமாவாசை- பள்ளியில்  படையலிட்ட தலைமை ஆசிரியர்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்
x


எடப்பாடி அருகே பள்ளிக்கூடத்தில் சமையல் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.


எடப்பாடி அருகே சவுரிபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், தை அமாவாசையன்று ஆசிரியர்கள், உறவினர்களைக் கொண்டு பள்ளிக் கூடத்தில் சமைத்து படையலிட்டுள்ளார்.

பின்னர், உணவை பவானி கூடுதுறைக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், மாவட்ட தொடக்க‌க் கல்வி அலுவலர் மாதேஷ் நேரில் நடத்திய விசாரணையில் பள்ளிக்கூடத்தில் படையலிட்டது தெரிய வந்த‌து.

இதையடுத்து, ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்