பழனியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்த எடப்பாடி பக்தர்கள்!

x

பழனி முருகன் கோயில் மலை மீது தங்கிய எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள், படி பூஜை, மலர் வழிபாடு செய்து முருகனை வழிபட்டனர்.

பழனி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பருவதராஜகுல சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

மேலும், எடப்பாடியில் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்து வந்த அவர்கள், மலை மீது ஒரு நாள் தங்கியிருந்து முருகனை வழிபாடு செய்தனர்.

இந்த வழக்கம், கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மேலும்,15 டன் அளவிற்கு பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்த அவர்கள், அவற்றை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர்


Next Story

மேலும் செய்திகள்