பொருளாதார நெருக்கடி, தற்கொலை முயற்சி..! விபரீத முடிவெடுத்த அப்பாஸ்... வெளியான பரபரப்பு தகவல்கள்

x

பண நெருக்கடி காரணமாக... டாக்ஸி டிரைவராக பணியாற்றியதாக நடிகர் அப்பாஸ் தெரிவித்திருப்பது... இணையத்தில் அவரை பேசு பொருளாக்கியிருக்கிறது. எங்கிருக்கிறாரா அப்பாஸ் ? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் படத்தின் மூலம் காதல் நாயகனாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த சாக்லேட் பாய் தான் அப்பாஸ்.

குறிப்பாக 90's கிட்ஸ்களை தனது ஹேர் ஸ்டைலால் கவர்ந்தவர். அந்த காலகட்டத்தில் அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம்.

தமிழில் மட்டுமல்ல காதல் தேசம் தெலுங்கிலும் ஹிட் அடிக்க.... தமிழ் மூலம் கிடைத்த அறிமுகத்தால் தெலுங்கு... கன்னடம்... பாலிவுட் என ஒரு ரவுண்ட் வந்தார், அப்பாஸ்.

இப்படி ஓப்பனிங் சரியாக அமைந்தாலும்... ஆரம்பத்திலேயே பல தோல்வி படங்களையும் அவர் கொடுக்க நேரிட்டது.

விஜயின் 'காதலுக்கு மரியாதை' இயக்குனர் சங்கரின் 'ஜீன்ஸ்' ஆகிய படங்களில் முதலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அப்பாஸை தான் தேடிச் சென்றது...

ஆனால் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பிஸியாக நடித்து கொண்டிருந்த அப்பாஸுக்கு அடுத்தடுத்த படங்கள் கை கொடுக்கவில்லை.

இதனால் ஆரம்பத்திலேயே இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை அதிகம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்த அப்பாஸ்.... சில படங்களில் துணை நடிகர் வேடங்களையும் ஏற்று நடித்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர்.... தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலாகினார்.

ஆம்... 19 வயதிலேயே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ்.... 22 வயதில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாக்களில் தங்களை ஓவர் ஆக்டிவாக வைத்து கொள்வது வழக்கம் . ஆனால் அப்பாஸ் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அதனால் அப்பாஸ் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது பலருக்கும் தெரியாது.

இந்நிலையில், தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அப்பாஸ் அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது.

அந்த பேட்டியில் தனது கடந்த கால நிகழ்வை மனம் விட்டு பகிர்ந்த அவர்.... பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற போது... அந்த சமயம் தன் காதலியும் தன்னை விட்டு பிரிந்ததால்... தற்கொலை செய்ய முயற்சித்ததாக பகிர்ந்துள்ளார்.

இன்று தற்கொலை எண்ணங்களில் இருந்து பலரையும் விடுவிப்பதை நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறார், அப்பாஸ்.

அதோடு தான் குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறிய போது.... ஆரம்பத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக மெக்கானிக்காகவும் கார் ஓட்டுனராகவும் பணியாற்றியதாக அந்த பேட்டியில் அப்பாஸ் தெரிவித் திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சினிமாவை பொறுத்தவரை... கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் சாதாரண முயற்சியாக தான் படங்களில் நடித்ததாகவும்... நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டது இல்லை என்றும் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சலிப்பு ஏற்பட்டதால் சினிமாவில் இருந்து தாம் விலகி விட்டதாகவும்... சினிமாவில் ஆசைப்பட்டு நடிக்கவில்லை என்றும் நடிகர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது அப்பாஸ் நியூசிலாந்தில்... பிசினஸ் அனலிஸ்டாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்