"EB Bill கட்டுங்க-னு வந்த SMS..." கிளிக் செய்த உடன் ரூ.9.50 லட்சம் திருட்டு - அதிர்ச்சியடைந்த ஐ.டி. ஊழியர்

x
  • சென்னையில் ஐ.டி. ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..கொளத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் நிஃமத்துல்லாஹ்.
  • இவரது செல்போனுக்கு, விரைந்து மின் கட்டணம் செலுத்தும்படியும், இல்லையேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
  • மின் கட்டணம் செலுத்திய ரசீதை, குறுஞ்செய்தியில் இருந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி, அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, லிங்கில் உள்ள ஆப்பில் 10 ரூபாய் செலுத்தினால்தான் மின் கட்டணம் சர்வரில் அப்டேட் ஆகும் என மறுமுனையில் இருந்தவர் தெரிவித்துள்ளார்.
  • இதனை நம்பி, அந்த லிங்கை கிளிக் செய்தபோது, நிஃமத்துல்லாஹ் வங்கியிலிருந்து, 13 லட்சம் ரூபாய் இன்ஸ்டா லோன் எடுத்ததாக, குறுஞ்செய்தி வந்துள்ளது.
  • இதனைத் தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருந்து 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்று தவணையாக திருடப்பட்டுள்ளது.
  • எந்தவித ஓ.டி.பி.யும் இல்லாமல் நடந்தேறிய இந்த இணைய கொள்ளை குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்