மருத்துவமனையை உலுக்கிய நிலநடுக்கம் - 36 பேரின் நிலை கவலைக்கிடம்

x

மருத்துவமனையை உலுக்கிய நிலநடுக்கம் - 36 பேரின் நிலை கவலைக்கிடம்

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது.

அப்ரா மாகாணம் லகாயன் நகருக்கு வடமேற்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 36 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்டே மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்மாகாணத்தின் படாக் நகரில் உள்ள மருத்துவமனைகள் பலத்த சேதம் அடைந்தன.

இருப்பினும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் நாடானது நெருப்பு வளையம் எனப்படும் புவித் தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்