கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது மாடுகளை திருடியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

x

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது மாடுகளை திருடியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்


கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டு கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்த வன்முறையின் போது கைதான சின்னசேலத்தை சேர்ந்த பூவரசன், புதுபல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரன், சிறுகிராமத்தை சேர்ந்த சஞ்சீவி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த வசந்தன் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பூவரசன் மாடுகளை திருடியதாலும், மற்ற 3 பேர் போலீசார் வாகனத்திற்கு தீ வைத்ததாலும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்