கச்சேரியின்போது இரு கிராமத்தினர் தகராறு.. அம்பேத்கர் படம் கிழிப்பு.. போலீசார் குவிப்பு

x

ஓசூர் அருகே கோவில் திருவிழாவின்போது, இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டதில், அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டு, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சின்ன தாசரபள்ளியில் கச்சேரியில் அம்பேத்கர் பாடல் ஒலித்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அருகில் உள்ள அட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை முடிந்த பிறகு, சின்ன தாசரப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், விபத்தில் காயம் அடைந்தார். அவரை அட்டூர் இளைஞர்கள் தாக்கியதாக தகவல் பரவியதால், சின்ன தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர்கள், அட்டூரில் நுழைந்து அம்பேத்கர் படத்தை கிழித்து, வீடு, 2 கார்கள் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்