துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்..தெற்கு மண்டல அணி அபாரம் | Duleep Trophy 2023

x

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும் மேற்கு மண்டல அணியும் மோதின. முதல் இன்னிங்சில் தெற்கு மண்டலம் 213 ரன்களும், மேற்கு மண்டலம் 146 ரன்களும் அடித்தன. 2வது இன்னிங்சில் தெற்கு மண்டலம் 230 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 298 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 2வது இன்னிங்சில் மேற்கு மண்டலம் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தெற்கு மண்டலம், துலீப் கோப்பையையும் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்