தெலுங்கானாவில் அசுர வேகத்தில் மோதிய டிஎஸ்பி கார்.. பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இளைஞர் - பதைபதைப்பு காட்சிகள்

x

தெலங்கானாவில் அதிவேகத்தில் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயமடைந்தார். தெலங்கானா மாநிலம், தேவரகொண்டா அருகே காவல் துணை கண்காணிப்பாளரின் வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. வளைவு ஒன்றில் திரும்பியபோது, இளைஞர் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த இளைஞரை, காவல் துணை கண்காணிப்பாளர் தனது வாகனத்தின் டிக்கியில் படுக்க வைத்து தேவரகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது இந்த விபத்து சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்