தலைக்கேறிய போதை..விமானத்தில் பயணி செய்த காரியம்.. அலறிய சக பயணிகள் - நடுவானில் பரபரப்பு

x

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை, குடிபோதையில் திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரதிக் என்ற பயணி, குடிபோதையில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், பிரதிக் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டார். இதில் பிரதிக் மது போதையில் இருப்பது உறுதியான நிலையில், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகுபடி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்