போதைமருந்து, பலாத்காரம், வீடியோ எடுத்து மிரட்டல்... 5 பெண்களின் வாழ்வை சீரழித்த பாஜக முன்னாள் பிரமுகர் அதிரடி கைது

x

ஆஸ்திரேலியாவில், 5 கொரிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இந்திய வம்சாவளி சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தன்கர் என்பவர், பாஜக கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள் பிரிவு முன்னாள் தலைவராக இருந்து வந்தார். தன்கர், 5 கொரிய பெண்களுக்கு போதைப்பொருளை கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் தன்கரை கைது செய்த போலீசார், அவரது செல்போன் மற்றும் கணிணியை சோதனை செய்தனர். அதில் தன்கர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஏராளமான வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்கர் மீது, போலீசார் 39 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன்கர் ஜாமின் கோரி, சிட்னி நீதிமன்றத்தில் அளித்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையை மே மாதம் ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்