போதைப் பொருள் கடத்தல் - கைதான சுயேட்சை ஊராட்சிமன்றத் தலைவர்

x

காசிம் என்பவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளைக் கடத்தி வந்து ஏஜெண்ட் குமரவேலிடம் கொடுத்துள்ளார்... இது குறித்த ரகசிய தகவலை அறிந்து கொண்ட ராயபுரம் போலீசார் அண்ணாசாலை அருகே இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகையைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் வழக்கமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருளைக் கடத்தி வருவது கண்டறியப்பட்டது. நாகை விழுந்தமாவடியைச் சேர்ந்த மகாலிங்கம் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவரானார். இவரது மகன் அலெக்ஸ், கீழையூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். மகாலிங்கம் திமுகவில் சேர முயன்ற நிலையில், அவரை அக்கட்சி இணைக்கவில்லை. டெல்லியில் இருந்து காசிம் மூலம் கடத்தி வரப்படும் போதைப்பொருளை, மகாலிங்கத்திற்குக் கொண்டு சென்று கொடுப்பது குமரவேலின் வேலை. காசிம், குமரவேல் அளித்த தகவலின்பேரில் ராயபுரம் தனிப்படை போலீசார், நாகை சென்று மகாலிங்கத்தையும் அவரது மகன் அலெக்சையும் கைது செய்தனர். 2017லேயே இலங்கையில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்திய வழக்கில் இவர் உட்பட மூவரை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட காசிம், குமரவேல் ஆகிய 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்சை ஜார்ஜ் ட்வுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்