லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தல்

x

இ ந்திய - இலங்கை கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஜிபிஎஸ் கருவிகள் முக்கிய பங்காற்றுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அதிக

அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழக கடலோர காவல் குழுமம் போலீசார், கியூ பிரிவு, மத்திய உளவு பிரிவு போலீசார், கடலோர காவல் படை, இந்திய கடற்படை உள்ளிட்டோர் தீவிர கூட்டு முயற்சியில் கடத்தல் பொருட்களை தடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்தாலும் அவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுக்கும் வகையில் கடத்தல்காரர்கள் ஒரு படி மேலே சென்று கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அதாவது, கடற்படையிடம் சிக்காமல் இருப்பதற்காக, இலங்கைக்கு கடத்தப்படும் போதை பொருட்களை, முதலில் கடல் நீர் உள்ளே செல்லாதவாறு பிளாஸ்டிக் கவர்களை கொண்டு நன்றாக பேக்கிங் செய்து, அதில் ஜிபிஎஸ் ரெக்கர் கருவிகளை பொருத்தி,

கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜிபிஎஸ் ரெக்கர் கருவிகள் பொருத்தப்பட்ட போதைப்பொருள் மூட்டைகளை ஒருதரப்பினர் கடலில் வீசிச்செல்லும் நிலையில், அதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மற்றொரு தரப்பு எடுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்