"தாறுமாறாக திட்டி தாக்குதல்" போராட்டத்தில் குதித்த ஓட்டுநர், நடத்துநர்கள்... கோயம்பேட்டில் முடங்கிய போக்குவரத்தால் பரபரப்பு

x

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வரை செல்லும் பேருந்தில் ஏறிய இளைஞர்கள் சிலர், பேருந்தை இயக்குமாறு தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்தில் தான் பேருந்தை இயக்க முடியும் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த நபர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர்.

இது பற்றி தட்டிக் கேட்ட, அருகிலிருந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் அவர்கள் தாக்கினர்.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் கோயம்பேட்டில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றபின், பேருந்துகள் இயக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்