ம.பி-யில் ஓட்டுநர் தாக்குதல் - ஈரோட்டில் வெடித்த போராட்டம்
மத்திய பிரதேசத்தில் நடந்த ஓட்டுநர் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஈரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயமங்கலம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி முன்பாக லாரி ஓட்டுநர்கள் கருப்பு பட்டை அணிந்தும் லாரிகளில் இருபுறமும் கருப்புக்கொடி கட்டியும், தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற ஓட்டுநர் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அமைச்சர் முத்துசாமி சம்பவ இத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Next Story
