குடிநீர் கேன் நிறுவனத்திற்கு சீல்..விஷமாகும் குடிநீர்..அச்சுறுத்தும் அசுத்த கேன்கள்..

x

சென்னையில் தரம் மற்றும் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த கேன் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க கேன் தண்ணீர் விநியோகம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சுகாதாரமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநிநோகிக்கப்படுவதில்லை என்ற புகார் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்தது.

சென்னை கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஆத்மா அக்குவா குடிநீர் விநியோக நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஐஎஸ்ஐ உரிமம் புதுப்பிக்கவில்லை என தெரிய வந்தது. ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்த போது, இயந்திரங்களில் புறா கூடு கட்டி இருப்பதும் ஒரு புறா இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு கூடம் இதுவரை பயன்படுத்தியதே இல்லை என்பதும், அங்கு வைக்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருப்பதும், அதை பயன்படுத்தவே இல்லை என்பதும் தெரியவந்தது.

கேன்களை முறையாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்தது. அதனால் 30-க்கும் மேற்பட்ட கேன்கள் அதிகாரிகள் முன்னிலையில் உடைக்கப்பட்டன.

குடிநீரை ஆய்வு செய்ய மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள், நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சுகாதாரமில்லாமல், தரமற்ற முறையில், நிறுவனங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என கேன் குடிநீர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்